''யானை பசிக்கு சோளப்பொறி'' - ஈ.பி.எஸ். கண்டனம்!

யானை பசிக்கு சோளப்பொறி - ஈ.பி.எஸ். கண்டனம்!

எடப்பாடி பழனிச்சாமி

காவிரியில் 2024-25 மே, ஜூன் மாத பங்கு நீரை பெற திமுக அரசு இதுவரை முயற்சிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஜூன் 14ல் அறிவிக்கப்பட்ட குறுவைத் தொகுப்பில் பெரும்பகுதி விதை நெல் மானியம், தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத்சு. திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு செய்யவில்லை.

டெல்டா விவசாயிகளின் தேவை என்ன என்பதை கண்டு கொள்ளாமல், அவசர கதியில் குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது.- அவர்களின் துயரத்தை போக்கவும் முடியாது.

ரூ. 78.67 கோடியில், 24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப்பொறி என்பதுபோல்தான்.

பாசனத்திற்கு தண்ணீரே இல்லாத நிலையில், விவசாயிகள் இந்த விதை நெல்லை வாங்கி எங்கே நாற்றங்கால் தயார் செய்வார்கள்?'' என கேள்விஎழுப்பியுள்ளார்.

Tags

Next Story