நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி: இபிஎஸ்
நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை செய்யவில்லை. நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலையிலான கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாகத் தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே உள்ள மைதானத்தில் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தார். மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கள்ளக்கூட்டணி வைத்ததாக பேசுகிறீர்களே அதற்கான ஆதாரம் உள்ளதா?
திமுகவுடன் பாரதிய ஜனதா கள்ளக்கூட்டணி வைத்தற்கான ஆதாரத்தை வாக்களப் பெருமக்களாகிய உங்களிடம் காட்டுகிறேன் என்று புகைப்படத்தை காட்டினார். பிரதமர் தமிழகம் வந்தபோது, முதல்வராக இருந்த நான் பல் இளித்தேன் என்கிறார் உதயநிதி. நீ என்ன பண்ணிட்டு இருக்க? நீயும் அதேதான பண்ணிட்டு இருக்க? நீ சிரிச்சா சரி, நான் சிரிச்சா தப்பா? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கோ பேக் மோடி என்று தமிழகம் முழுவதும் விளம்பர போர்டுகளை வைத்து எதிர்ப்பை காற்றினீர்களே? ஆனால் இன்று வெல்கம் மோடி என்று கூறுகிறீர்களே. நாங்கள் நினைத்தால் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து அமைத்து ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியும். ஆனால் அதை செய்யவில்லை.
நாங்கள் என்றுமே மக்களுடன் தான் கூட்டணி. பதவி ஆசை எங்களுக்கு எப்போதுமே கிடையாது. தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின்போது அவர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுத்தது அதிமுக தான். ஏற்கனவே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எஸ் பி சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்எல்ஏ, கழக அமைப்புச் செயலாளர்கள் என் சின்னத்துரை, செல்ல பாண்டியன், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஹென்றி தாமஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பிரபு, மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், மாவட்ட இளம்பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் யு எஸ் சேகர், இணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட தொழிற்சங்க ஆட்டோ சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி செயலாளர் ஜெய்கணேஷ், முருகன், சேவியர், கேவிகே விஜயன் கேவிகே நகர் முருகன், மாவட்ட தொழிற்சங்க துணைத்தலைவர் சுரேஷ் பெர்னெண்டோ, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, தனராஜ், கே.ஜே.பிரபாகர், நடராஜன், ஏ.கே. மைதீன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆண்ட்ருமணி, வழக்கறிஞர்கள் முனியசாமி, நிர்வாகிகள் டைகர் சிவா, வடக்கு பகுதி துணைச் செயலாளர் செண்பகச்செல்வன், வலசை வெயிலுமுத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லட்சுமணன், துணைச் செயலாளர்கள் ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், முத்துக்கனி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பொற்கிழி ஜான்சன் தேவராஜ், சாமுவேல், வெங்கடேஷ், மண்டல போக்குவரத்து பிரிவு இணை செயலாளர் லெட்சுமணன், நாகூர் பிச்சை, முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், வட்டச் செயலாளர்கள் நவ்ஷாத், ஜெயக்குமார், மற்றும் சொக்கலிங்கம், கொம்பையா, உலகநாத பெருமாள், சுப்பிரமணி பாண்டியன், ஜெகதீஸ்வரன், இசக்கி முத்து, சுந்தரேஸ்வரன், மைதீன், காதர், கார்த்திக், திலகர், சங்கர், சோபன், வசந்த், சிதம்பரம், இராஜேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம்ராஜ், சகாயராஜ், யுவன் பாலா, உதயகுமார், மைதீன், உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.