"சிப்காட்டில் 40 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் " - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சிப்காட்டில் 40 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம்  - அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்

பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் 40 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது இந்த மக்களின் பத்து ஆண்டு கோரிக்கை என்றும், முதல்வர் இதற்கு நிரந்தர தீர்வு கொடுத்துள்ளார் என்றும் கூறினார். தற்போது சுத்திகரிப்பு நிலையம் 5 ஏக்கர் பரப்பளவில் 40 கோடி மதிப்பில் உருவாக்கப்படவுள்ளது என்று கூறிய அவர், இதில், அரசு 20 கோடியும், மீதமுள்ள 20 கோடி தொழிற்சாலைகளும் தர உள்ளதாகக் கூறினார். மேலும், இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் 8 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொது சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து கழிவுகளும் சுத்திகரிப்பு செய்யப்படும் என்றும் கூறினார்.

Tags

Next Story