சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் கடத்தல் - 440 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் கடத்தல் - 440 கிலோ தங்கம் பறிமுதல்

பைல் படம் 

சென்னை விமான நிலையத்தில் கடந்த நிதி ஆண்டில், 440 கிலோ தங்கமும், 42.68 கிலோ போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

சென்னை விமான நிலையத்தில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக, பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு கரன்சி, வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. துபாய், அபுதாபி சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கம், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து போதை பொருள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்படுகின்றன.

சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சி கடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகளை கைது செய்கின்றனர். கடந்த 2023 - 24ம் நிதி ஆண்டில், 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 248 கோடி ரூபாய். அதுபோல், 192 கோடி ரூபாய் மதிப்புடைய 42.68 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19.44 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story