தொழில் துறையினரை மிரட்டும் பாஜக - ஈஸ்வரன் குற்றசாட்டு

தொழில் துறையினரை மிரட்டும் பாஜக - ஈஸ்வரன் குற்றசாட்டு

 ஈஸ்வரன் தேர்தல் பிரச்சாரம் 

மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என தொழில் துறையினரை பா.ஜ.கவினர் மிரட்டி வருவதாகவும் , தேர்தலில் ஆதரவு தாரவிட்டால், வருமான வரித்துறை , அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை பாயும் என அச்சுறுத்தப்படுவதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிராகாஷை ஆதரித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஈரோடு குமலன் குட்டை பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டு கால சர்வாதிகார பாஜக ஆட்சியில் அனைத்து தொழில் நலிவடைந்துள்ளதாகவும் , மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால், மிக மோசமான நிலை ஏற்படும் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்கான தேர்தல் இது என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் , மீண்டும் மத்தியில் ஆட்சி அமையும் என தொழில் துறையினரை பா.ஜ.கவினர் மிரட்டி வருவதாகவும் , தேர்தலில் ஆதரவு தாரவிட்டால், வருமான வரித்துறை , அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை பாயும் என அச்சுறுத்தப்படுவதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டினார். மேலும் இந்த தேர்தலுடன் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளித்த ஈஸ்வரன் , வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தான் எடப்பாடி பழனிசாமி தேமுதிக , புதிய தமிழகத்துடன் கூட்டணி வைத்தாரா என கேள்வி எழுப்பினர்.

Tags

Next Story