50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
கெங்கவல்லி:சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தேமுதிக, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், காவிரி பிரச்சனை தொடர்பாக தேமுதிக, கட்சியின் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தரும் வரை தேமுதிக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என தெரிவித்த பிரேமலதா அவர்கள் காவிரியில் தண்ணீர் கிடைப்பது பற்றி தெளிவான எந்த அறிவிப்பும் வராதது கண்டிக்கதக்கது என்றும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேசிய பிரேமலதா ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு விளக்கு அளிக்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது முட்டையை காண்பித்து அரசியல் செய்யும் திமுக, முட்டையை காண்பித்தாலும் சரி ஆம்லைட் காண்பிதாலும் சரி 50 லட்சம் கையெழுத்து வாங்கினாலும் சரி, 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு படிக்கிறார்கள், தமிழ் நாட்டிற்கு மட்டும் நீட் விலக்கு சாத்தியமில்லை என்றும், தமிழக மாணவர்கள் ஓரிரு ஆண்டுகளில் நீட் தேர்வில் முதன்மையானவர்களாக வருவார்கள் அவர்களை குழப்பி உதயநிதி ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை நீக்கி விட்டு பாரத் என பெயர் மாற்றியதற்கான கேள்விக்கு சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து இந்தியா என்கிற பெயர் இரத்தத்திலே ஊறிவிட்டது, புதியதாக பாரத் என பெயர் மாற்றுவதை விட்டுட்டு நல்லபடியாக நாட்டை வழி நடத்த வேண்டுமென்றும் இந்தியா என்கிற கூட்டணிக்கு நாட்டின் பெயரை வைத்ததற்கு கண்டிக்கத்தக்கது என்றும் பேசிய பிரேமலதா, பிஜேபி கட்சியும் திமுக,கட்சியும் நாட்டையும் நாட்டு மக்களையும் குழப்புகின்ற செயல்களை தான் செய்கிறார்களே தவிர இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த பலனில்லையென தெரிவித்தார், மேலும் கூட்டணி தொடர்பாக ஜனவரி மாதம் தலைமை கழகம் முடிவெடுத்து யாருடன் கூட்டணி என்றும் எத்தனை தொகுதிகளில் தேமுதிக, போட்டியிடும் என அறிவிப்பதாக தெரிவித்தார்,