ஒவ்வொரு வாக்கும் ஒன்றிய பாசிச அரசை வீழ்த்துவதற்கான வாக்கு - தமிழச்சி தங்கபாண்டியன்

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் நீலாங்கரை பகுதியில் தனது வாக்கினை செலுத்திய பின், ஒவ்வொரு ஓட்டும் ஒன்றிய பாசிச அரசை வீழ்த்துவதற்கான வாக்காக இருக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் உள்ள புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்கு சாவடியில், தென் சென்னை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

இந்த நாடாளுமன்ற தேர்தல் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இல்லை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான இரண்டாவது தேர்தல் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மிக எழுச்சியோடு எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வந்து வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இன்று நீலாங்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளோம். வாக்களிக்க வேண்டிய உரிமை கடமை மக்களுடையது அதனை மக்கள் நிறைவேற்றுவார்கள்.

40 தொகுதிகளிலும் உதயசூரியன் வெற்றியடையும் அதை மக்கள் அளிப்பார்கள். பொதுமக்கள் இதுநாள் வரை யார் அவர்களுக்கு நல்லது செய்து இருக்கிறார்கள் அவர்களின் குடும்பத்திற்கு குடும்பத் தலைவிக்கு குடும்ப பிள்ளைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழக செய்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் மிகக் குறிப்பாக தென் சென்னை மக்கள் வெள்ளத்தின் போது யார் உடன் இருந்தார்கள் நிவாரண பணிகள் வழங்கினார்கள் அதை செய்தது இந்த திமுக அரசு என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் ஒன்றிய பாசிச அரசை வீழ்த்துவதற்கான வாக்காக இருக்க வேண்டும். என்றார்.

Tags

Next Story