முன்னாள் டி.ஜி.பி மேல்முறையீட்டு மனு - வாதிட கால அவகாசம்

முன்னாள் டி.ஜி.பி மேல்முறையீட்டு மனு -  வாதிட கால அவகாசம்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித் தாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.500 அபராதம் விதித்தும் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின்போது செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப் பிரண்டு தரப்பு வக்கீல்கள் ஏற்கனவே வாதிட்டு முடித்தனர். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இம்மேல்முறையீடு தொடர்பாக வாதிட காலஅவகாசம் கேட்டனர். பலமுறை காலஅவகாசம் வழங்கியபோதிலும் அவர்கள் வாதிடாததால் இம்மேல் முறையீடு தொடர்பாக நவம்பர் 6-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் இம்மேல்முறையீடு தொடர்பான மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், கலா ஆகியோர் ஆஜராகி தங்கள் வாதுரையை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த னர். மேலும் இம்மேல்முறையீடு தொடர்பாக வாதிட கால அவகாசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததில் கால அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தர விட்டதாக கூறி அதற்கான நகலை முன்னாள் சிறப்பு டி.ஜி. பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து இம்மனு மீதான விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு மாவட்ட நீதிபதி பூர்ணிமா, ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் ஆஜராகி இம்மேல்முறையீடு தொடர்பாக வாதிடும்படி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்புக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story