முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பு

பாலகிருஷ்ண ரெட்டி

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1998 ஆம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.ஓசூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, பாலகிருஷ்ணா ரெட்டி மீது பதியப்பட்ட வழக்கில் 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார். 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Tags

Next Story