அதிமுக ஆட்சியில் ரூ.60, தற்போது ரூ.150 - முன்னாள் அமைச்சர் வீரமணி
திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் பன்னீர் செல்வம் நகர் பகுதியில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, திமுக உருவாதற்க்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் அவருக்கும் ஜெயலலிதாவிற்க்கும் நிறைய தொந்தரவு அளித்தவர்கள் திமுகவினர். ஜெயலலிதாவை லாரி ஏற்றிக் கொல்லப்பார்த்தவர்கள் திமுகவினர். காங்கிரஸ் தமிழகத்தில் காலடி வைக்ககூடாது என திமுக என்ற கட்சியை தொடங்கியவர் அண்ணா, ஆனால் அண்ணாவின் கொள்கையிற்கு மாறாக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் திமுகவினர்.மேலும் பாஜகவையும், காங்கிரஸையும் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு அழைத்து வந்தவர்கள் திமுகவினர் தான், தற்போது அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணியில்லை என பொய் பேசுகிறார்கள் என கூறுகிறார்கள் திமுகவினர். ஏஜென்ட் மூலம் 520 பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். அதிமுக ஆட்சியில் 60 ரூபாயாக இருந்த மதுபானங்களின் விலை தற்போது 150 ரூபாயாக உயர்த்தி அவர்களிடம் இருந்தே பணத்தை பெற்று அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள் அதையும் சரிவர வழங்காமல் தகுதி பார்த்து வழங்குகிறார்கள்.. அதிமுக ஆட்சியில் பால் விலையை உயர்த்த கூடாது எனக்கூறி போராட்டம் நடத்திய திமுகவினர் தற்போது 8 முறை பால் விலையை உயர்த்தியுள்ளார்கள் மேலும் விலைவாசி, மின்கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். என்றார்