வாலாஜா சாலையில் பறக்கும் படை பணிகளை ஆய்வு செய்த செலவின பார்வையாளர்கள்
அதிகாரிகள் ஆய்வு
சோளிங்கர் வாலாஜா சாலையில் பறக்கும் படை குழுவினர் வாகனங்களில் சோதனை மேற்கொள்வதை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்,தேர்தல் செலவின பார்வையாளர்கள் சிவசங்கர் யாதவ் மற்றும் மேவாராம் ஓலா ஆகியோர், பறக்கும் படை குழுவினர் சோளிங்கர் வாலாஜா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஆய்வு செய்தனர்.
அப்போது வாகனங்களில் ஆய்வு செய்யப்படுவது குறித்து குறித்து வைக்கப்படும் பதிவேடு போன்றவற்றை தேர்தல் செலவின பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
Next Story