சிதம்பரம் நடராஜர் கோவிலில் பராமரிப்பு பணி மேற்கொள்ள நிபுணர் குழு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முன் வந்துள்ளது. குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் பெயர்களை பரிந்துரைக்கும்படி, மனுதாரர்கள் மற்றும் அறநிலையத் துறைக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியுமின்றி கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கோவிலின் மூன்று பிரகாரங்களிலும் கலையை மறைக்கும் வகையில் அறைகள் கட்டப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்டுமானங்கள் அனைத்தும் கோவில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று உயர்நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறவில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுள்ளது.
Next Story