ஒசூர் ரோஜாக்கள் கடந்தாண்டை 60% ஏற்றுமதி குறைவு

ஒசூர் ரோஜாக்கள் கடந்தாண்டை 60% ஏற்றுமதி குறைவு
காதலர் தினத்திற்கு ஒசூர் பகுதி ரோஜாக்கள் கடந்தாண்டை விட 60% ஏற்றுமதி குறைநதுள்ளது என கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது , காதலர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதற்கு ரோஜா அனைவருடைய மனதிலும் குடி கொண்டிருக்கும் இந்த ரோஜா தான் தமிழகத்தின் எல்லையான ஓசூர் ரோஜா உற்பத்திக்கு அதிகஅளவில் மேற்க்கொள்வதால் ஒசூருக்கு ரோஜா நகரம் என்ற பெயரும் உண்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி வருடம் முழுவதும் சீரான சீதோசன நிலை நிலவி வருவதால் காய்கறி உற்பத்தி மட்டுமின்றி மலர் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் ஒசூர், தளி,தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை போன்ற பல பகுதிகளில் விவசாயிகள் பசுமை குடில்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்

இப்பகுதியில் தாஜ்மஹால், கிராண்ட் காளா , அவலான்ஸ், நோ ப்ளஸ் உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட வகையான மலர்களை உற்பத்தி செய்கின்றனர். வருடம் முழுவதும் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும் குறிப்பாக கிறிஸ்மஸ் புத்தாண்டு மற்றும் காதலர் தினங்களில் அதிக அளவில் மலேசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.. இதுக்குறித்து இன்று பத்திரிகையாளர்களை ஓசூரில் சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

ஒசூர் பகுதியில் காதலர் தினத்திற்காக ஆண்டுதோறும் காதலை வெளிக்காட்டும் சிவப்பு நிற ரோஜாக்களை அதிகஅளவில் ஏற்றுமதி செய்ய விவசாயிகள் அதற்காக தயாராவது வழக்கம், இந்தாண்டு நல்ல விளைச்சல் இருந்ததால் 5 கோடி மலர்களை விவசாயிகள் உற்ப்பதி செய்து அசத்தி உள்ளனர்.. கடந்தாண்டு 3 கோடி மலர்கள் மட்டுமே அறுவடை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு விளைச்சல் அதிகம் என்றாலும் விலை குறைவு என்பது விவசாயிகளுக்கு சோகம் தான் உற்ப்பதி செய்யப்பட்ட 5 கோடி மலர்களில் 40 லட்சம் மலர்கள் மட்டுமே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதால் 60% த்திற்கும் அதிகமாக ஏற்றுமதி குறைந்துள்ளது.

கடந்தாண்டு உள்ளூர் சந்தையில் ஒரு ரோஜா மலர் 23 ரூபாய்கும், வெளிநாடுகளுக்கு 28 ரூபாய் வரை விற்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு உள்ளூரில் 12 முதல் 15 ரூபாய்க்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி 18 ரூபாய் மட்டுமே விலை கிடைப்பதாக கூறியதுடன் மேலும் உள்ளூரில் சுப நிகழ்ச்சிக்கள் குறைந்ததும், பீனியா நாட்டின் மலர்களுக்கு உலக சந்தையில் வரவேற்ப்பு அதிகரித்ததே விலை வீழ்ச்சிக்கான காரணம் என்றும்,

பூனே நர்சரியில் வாங்கப்பட்ட தாஜ்மஹால் வகை ரோஜாக்கள் விரைவில் உதிரும் வகையில் இருந்ததே சர்வதேச அளவில் விலை குறைவு என்றார் மேலும் ஓசூர் பகுதியில் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சர்வதேச மலர் ஏல மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஒரு மலருக்கு கூடுதலாக 5 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story