கோவில் நிலங்கள் அபகரிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆர்.பி சௌத்ரி
சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,779 சதுர அடி நிலத்திற்கு உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பத்திரப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.பி.சௌத்ரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசும், அறங்காவலர்கள் குழுவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு தெரிவித்துள்ளது. அறநிலைய துறை சட்டப்படி, மூன்று மாதங்களில் நிலத்தை மீட்டு, கோவில் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கோவில் நிலங்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றவர்கள்,
போலி உரிமை மூலம் உரிமை கோரும் நிகழ்வுகள் நடைபெற்று வருவது அதிகாரிகளின் துணையில்லாமல் சாத்தியமில்லை. வேலியே பயிரை மேயும் செயல்களை கடுமையாக கையாள வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.