அதே விலையில் நீட்டிக்கும் தங்கம் !

அதே விலையில் நீட்டிக்கும் தங்கம் !

 தங்கம் 

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலை அதிரடியாக ஒரே நாளில் வீழ்ச்சி அடைந்தது. இதனால் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் பிறகு தங்கத்தின் விலை குறைந்தபட்சம் அடுத்த 6 மாதத்திற்காவது உயராது என நினைத்திருந்தனர். ஆனால் அது அத்தனையும் பொய்யாகி விட்டது.

அதன்படி ஆபரண தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6,670 என்ற நிலையில் உள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,400 என இருந்த நிலையில் தற்போது ரூ.6,600 மேல் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,360 ஆக உள்ளது.

Tags

Next Story