கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு

கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு
X
பைல் படம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 3 நாட்களுக்கு படகு சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை போன்றவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். எனவே சுற்றுலா பயணிகள் வசதிக்காக வருகிற 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு படகு சவாரி 4 மணி நேரம் நீட்டிக்கப்பட உள்ளது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை இந்த மூன்று நாட்களிலும் காலை 6 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. அதை போல் மாலை 4 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக 6 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Tags

Next Story