அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு

அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு
விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு 
அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு தமிழ்நாடு அரசின் செட் தேர்வு எழுத விண்ணப்பித்தவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு ஏற்கனவே ஏப்ரல் 29 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மே 15 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் செட் தேர்வினை 2024 ஆகஸ்ட் மாதம் எழுத உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேலும் மே மாதம் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் செட் தேர்வு 2024 ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களும், இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் எழுத்துத் தேர்விற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு அரசின் செட் தேர்வில் தகுதிப்பெற்றால் மட்டுமே நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story