கள்ளக்காதல் விவகாரம் - இரு வங்கி ஊழியர்கள் சடலம் மீட்பு

கள்ளக்காதல் விவகாரம் - இரு வங்கி ஊழியர்கள் சடலம் மீட்பு

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை

கிளியனூர் அருகே புறவழிச்சாலையில் காரில் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், லாரியில் அடிபட்டு இறந்த நிலையிலும் கிடந்த வாங்கி ஊழியர்களின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் திண்டிவனத்தில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே வங்கியில் புதுச்சேரி கிளையில் பணிபுரியும் நெய்வேலி பகுதியை சேர்ந்த மதுரா பாண்டிஸ் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் பணிபுரியும் போது பழக்கம் ஏற்பட்டது, அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் இந்த விவகாரம் கோபிநாத் மனைவிக்கு தெரியவந்துள்ளது இந்த நிலையில் இன்று திடீரென விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் அருகே உள்ள புறவழிச்சாலையில் கோபிநாத் கார் நின்று கொண்டு இருந்துள்ளது.அதில் மதுரா பாண்டிஸ் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் அதற்கு எதிர் திசையில் உள்ள சாலையில் கோபிநாத் லாரியில் அடிபட்டு இறந்த நிலையிலும் கிடந்துள்ளார்.இதுகுறித்து தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மோப்பநாய் தடவையில் நிபுணர்கள் ஆகியோர் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story