ஆட்சியரின் புகைபடத்துடன் போலி அழைப்பு
ஆட்சியரின் புகைபடத்துடன் போலி அழைப்பு
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைபடத்துடன் கூடிய போலி அழைப்புகள் வந்தால் போலீசாருக்கு தககல் தெரிவிக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைப்பேசி எண்ணையே பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு தோற்றமாக வைத்த +998902451950 என்ற தொலைப்பேசி எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் கால் மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமாகவோ வரும் பொய்யான அழைப்புகளுக்கு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம்.
உடனடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story