60 அடி பள்ளத்தில் விழுந்த நபர், 5 மணி நேரத்திற்கு பின் மீட்பு

சேலம் அருகே ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள 60 அடி பள்ளத்தில் தவறி விழுந்து 5 மணி நேரம் வலியுடன் போராடிய நபரை காவல்துறையினர் மற்றும் 108 ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சேலம் கோரிமேடு அடுத்த பெரியகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி ( 54). இவர் ஏற்காடு செல்வதற்காக காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். 10 மணியளவில் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே செல்லும் பொழுது தலைசுற்றல் ஏற்பட்டு இருசக்கர வாகனத்துடன் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் பார்க்கவில்லை. சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு மலைப்பாதையில் சென்றவர்கள் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் ஒருவர் விழுந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 60 அடி பள்ளத்தில் இருந்து மணியை மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததில் அவரது முதுகெலும்பு மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் அடைந்துள்ளார் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story