அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்.

அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்.
ஓபிஎஸ்
அதிமுகவில் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், ஓ பன்னீர் செல்வம் அணியில் இருந்த புகழேந்தி, ஜே சி டி பிரபாகரன், கே சி பழனிசாமி அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடங்கியுள்ள நிலையில் அதில் நீங்கள் உடன் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும் என்று பதிலளித்தார்.

இராமநாதபுரம் மக்கள் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வழங்கியுள்ளனர், அவர்களுக்கு நன்றி. தமிழகத்தில் பாஜக வென்ற வாக்குகள் ,ஓ பன்னீர் செல்வம், டி டி வி ஆதரவு வாக்குகள் என்று சொல்லப்படும் கருத்து குறித்த கேள்விக்கு, இது மட்டும் இன்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.

Tags

Read MoreRead Less
Next Story