பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி விவசாயிகள் கோரிக்கை.
பரமத்தி வேலூர் வட்டார பகுதிகளான பாண்டமங்கலம்,பொத்தனூர்,வேலூர்,நன்செய் இடையாறு,பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் வாலை,வெற்றிலை,கரும்பு,கோரை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இங்கு விலையும் பயிர்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறந்து அதன் மூலம் மோகனூர் வாய்க்கால்,கொமாரபாளையம் வாய்க்கால்,பொய்யேரி வாய்க்கால் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதம் காலமாக தமிழகத்தில் வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகின்றது. காவிரியில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுகின்றனர். இப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தண்ணீர் திறக்கவில்லை இதனால் தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்து வருகின்றது. இன்று பரமத்தி வேலூர் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளரை சந்தித்த விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என பொதுப்பணி துறை செயற்பொறியாளர் ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் குடிநீர் தேவைக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டிள்ளாதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து பின்னர் தண்ணீர் திறந்து விடுவது குறித்து தெரிவிப்பதாக செயர்பொறியாளர் ஆனந்தன் தெரித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,உதவி பொறியாளர் சுரேகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.