மல்பெரி சாகுபடி பயிற்சி முகாம் : ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

மல்பெரி சாகுபடி பயிற்சி முகாம் : ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள்

மல்பெரி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி 

விவசாய திட்டங்கள் இடுபொருட்கள் பற்றி விளக்கி கூறப்பட்டது

சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் மல்பெரி சாகுபடி குறித்து அட்மா திட்டத்தின் சார்பில் ஒரு நாள் பயிற்சி விவசாயிகளுக்கு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு வட்டார வேளாண் அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கி, வேளாண் துறையில் உள்ள திட்டங்கள் பற்றியும்,இடு பொருட்கள் பற்றியும், இயற்கை விவசாயம் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார்.

இளநிலை உதவியாளர் ராஜ்குமார்‌ மல்பெரி உற்பத்தி தொழில்நுட்பங்கள், பட்டு புழு வளர்ப்பு, அதற்கான அரசு மானியம் குறித்து பேசினார். அட்மா தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா, அட்மா திட்டங்கள்,ஒருங்கிணைந்த பண்ணையம், உழவன் செயலியின் முக்கியத்துவம், சிறு தானியத்தின் மகத்துவம் குறித்து பேசினார்.

Tags

Next Story