பெண் போலீஸ் அடிக்கிறாங்க…. திருச்சி கோர்ட்டில் சவுக்கு கதறல்
பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீதும், அவரது பேட்டியை ஔிபரப்பிய பெலிக்ஸ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையிலும், பெலிக்ஸ் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சவுக்கு மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே சவுக்கு மீது பதிவு செய்த வழக்கிற்காக இன்று சவுக்கு சங்கர் திருச்சி மகளிர் கோர்ட்டுக்கு மதியம் 1.20 மணி அளவில் அழைத்து அழைத்து வரப்பட்டார். கோவையில் இருந்து அவரை பெண் போலீசாரே வேனில் அழைத்து வந்தனர். பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை பெண் போலீசாரே அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி கோர்ட்டிலும் ஏராளமான பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது கோர்ட் முன் திரண்டிருந்த பெண்கள் , சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷம் போட்டனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சவுக்கை , நீதிபதி ஜெயப்பிரதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு நீதிபதியிடம் கூறி்யதாவது: பெண் போலீசார் வரும் வழியில் என்னை அடித்தனர். கண்ணாடியை கழற்றச்சொல்லி வழி நெடுக்க என்னை அடித்தனர். அடிக்கும்போது அதை போனில் வீடியோ எடுத்து தங்கள் மேல் அதிகாரிக்கு அனுப்பினர் என்றார்.