குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை

குடும்ப தகராற்றில் பெண் தற்கொலை

சேலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

திருவொற்றியூரில் குடும்ப தகராற்றில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சிவராஜ் இவரது மனைவி கௌதமி வயது 36 இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நேற்று கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கௌதமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சிவராஜுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story