திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஜெயங்கொண்டம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
.அரியலூர், ஏப்.26- அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் அக்னி மற்றும் பூங்கரகத்துடன் வலம் வந்து, ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். பக்தி சிரத்தையுடன் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story