மதுரையில் பரவும் காய்ச்சல் - 52 பேர் மருத்துவமனையில் அனுமதி !!!

மதுரையில் பரவும் காய்ச்சல் - 52 பேர் மருத்துவமனையில் அனுமதி !!!

காய்ச்சல்

மதுரைமாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளித்த சுழல் நிலவி வருவதால் மழை நீர் சாலைகள் உள்பட பல்வேறு இடங்களில் தேங்கி இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தி செய்து டெங்கு காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு மத்தியில் எட்டு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. மதுரையில் சிற்றார்கள் உட்பட 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டுமே ஆறு பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூன்று முதல் ஐந்து நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 52 பேர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் காய்ச்சல் குறித்த கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story