ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

thangam thennarasu
தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காக, ரூ.150 கோடி மதிப்பில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை. தொழில் முதலீடு ஊக்குவிப்புத்துறைக்கு ரூ.3915 கோடி ஒதுக்கீடு. கருப்பைவாய் புற்றுநோயை தடுக்க 14 வயது சிறுமிகள் அனைவருக்கும் தடுப்பூசி திட்டம்; இதற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு. 10 லட்சம் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக்கடன் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1918 கோடி ஒதுக்கீடு. விண்வெளி சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு. சென்னை பெருநகர மாநகராட்சியில் திறன்மிகு மையம் ரூ.50 கோடியில் உருவாக்கப்படும். கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லையில் துணை திறன்மிகு மையங்கள் உருவக்கப்படும். ஒருங்கிணைந்த நீர் மேம்பாட்டு திட்டம் ரூ.2000 கோடியில் செயல்படுத்தப்படும். வெள்ள நீரை சேமிக்கும் வகையில், சென்னை கோவளத்தில், 3010 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கம். தமிழ்நாட்டில் வெள்ளிமலை, ஆழியாறு பகுதிகளில் ரூ.11,721 கோடி மதிப்பீட்டில் புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும். கடல் அரிப்பைத் தடுக்கும் அலையாத்தி காடுகளை பாதுகாக்க ரூ.50 கோடியில் கடல்சார் வள அறக்கட்டளை. திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரன்பட்டினம், சாமியார்பேட்டை, கீழ்புதுப்பட்டு கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற நடவடிக்கை. ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை வெளியிடப்படும்; எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு. 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம்(CNG) இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு. வேட்டைப் பறவை வாழிடங்களை பாதுகாக்க ரூ.1 கோடியில் ஆராய்ச்சி மையம். தனுஷ்கோடி கடற்கரை பகுதி பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்படும். போக்குவரத்துத்துறைக்கு, ரூ.1031 கோடியில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.