தண்டையார்பேட்டை அருகே தீ விபத்து

தண்டையார்பேட்டை அருகே தீ விபத்து

தண்டையார்பேட்டை அருகே மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.


தண்டையார்பேட்டை அருகே மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
சென்னை ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் சபியுல்லா என்பவருக்கு சொந்தமாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலை சிமெண்ட் ரோடு சந்திப்பு அருகே மரக்கடை ஒன்று உள்ளது. இக்கடையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்தனர்.

Tags

Next Story