சேலத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு!

சேலத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு!

விஜய்

தமிழகத்தில் பிரமாண்ட மாநாட்டுக்கு தயாராகி வருகிறார், தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்

'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்க வேண்டும் என விஜய் ஆர்வம்.

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடந்த இடத்தை தேர்வு செய்திருந்தார். அந்த இடத்தைக் கேட்டு விஜய் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் முதல்கட்ட பேச்சு வார்த்தையும் நடத்திய நிலையில் அந்த இடத்தை கொடுக்க முடியாத சூழல் நிலவுவதாக தகவல் வெளியானது.

விஜய் தேர்வு செய்த சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள மதுரை இடத்தில் புதிய பள்ளிக்கான கட்டட பணிகளை தொடங்க திட்டம் என தகவல் வெளியானது.

மதுரைக்கு பிறகு திருச்சியில் மாநாடு நடத்த தேர்வு செய்த இடம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வந்த நிலையில், சேலத்தில் முதல் மாநில மாநாட்டை விஜய் நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் சேலம் வந்திருந்தார். இந்ந்த நிலையில் சேலம் அருகே இருக்கும் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி, காக்காபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ளூர் நிர்வாகிகளுடன் அவர் மைதானங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் உறுதியாகி உள்ளதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Tags

Next Story