ட்ரோன்கள் விற்பனை செய்த முதல் ஷோரூம்

ட்ரோன்கள் விற்பனை செய்த முதல் ஷோரூம்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் ட்ரோன்கள் விற்பனை செய்ய இந்தியாவில் முதல் முறையாக தனி ஷோரூமை கருடா ஈரோஸ்பெஸ் திறந்துள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் ட்ரோன்கள் விற்பனை செய்ய இந்தியாவில் முதல் முறையாக தனி ஷோரூமை கருடா ஈரோஸ்பெஸ் திறந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ட்ரோன்கள் விற்பனை செய்வதற்காக தனிப்பட்ட சோரூம் இந்தியாவில் முதல்முறையாக கருடா ஸ்பேஸ் டெக்னாலஜி நிறுவியுள்ளது. இந்த ஷோரூமை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தொடங்கி வைத்தார். மேலும் முழுக்க முழுக்க இந்திய உற்பத்தியான ட்ரோனி ட்ரோன் என்று சிறிய வகை இந்திய தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் வேல்ராஜ், அக்னி குரூப் ஆப் கம்பெனி மற்றும் கல்லூரி மூலம் பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன.

இன்று ட்ரோனி ட்ரோன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பொருட்கள் நேரடியாக பயனர்களை சென்று சேருவதில்லை, டிரோன்களுக்கென இந்தியாவில் முதல்முறையாக தனியாக கருடா ஏரோ ஸ்பேஸ் ஷோரூம் அமைத்துள்ளார்கள். ட்ரோன்கள் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும். டிரான்களை தொழிற்சாலை பொருளாக இல்லாமல் கமர்சியல் பொருளாக கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள். ட்ரோன் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகம் வருவதற்கு இந்த தனிப்பட்ட ட்ரோன் ஷோரூம் ஒரு முதல் அடியாக இருக்கும் விவசாய மக்களுக்கு மட்டும் இன்றி பாதுகாப்பு காரணங்களுக்காக, பொதுமக்களுக்கும் உபயோகிக்கும் வகையில் பல வகைகளில் ட்ரோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் M E ட்ரோன் டெக்னாலஜி படிப்பு இந்த ஆண்டே கொண்டு வர முயற்சி செய்தோம். விரைவில் கொண்டு வரப்படும். மெக்கானிக்கல் படிப்பில் இருந்து எப்படி ஆட்டோ மொபைல் வந்ததோ, அப்படி ஏரோ ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பு ஏற்கனவே உள்ளது அதில் ட்ரோன் படிப்பு வரும் பொழுது அதற்கும் அதிக வேலை வாய்ப்பு இருக்கும். தொடர்ந்து பேசிய கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனர் ஜெயபிரகாஷ், 500 கிராம் குறைவாக உள்ள ட்ரோன்களை லைசென்ஸ் இல்லாமால் பயன்படுத்தலாம். 7.5 லிட்டர், 10 லிட்டர் மேல் உள்ள ட்ரோன்கள் லைசன்ஸ் பெற வேண்டும். இப்போது அறிமுகப்படுத்தி உள்ள டிரோனி ட்ரோன்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை அழகை ரசிப்பதற்காகவோ, பொது பயன்பாட்டிற்காகவோ உலகை வேறு ஒரு பார்வையில் பார்க்க விரும்புபவர்கள் என எப்படி வேண்டுமானாலும் இந்த ட்ரோன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் இந்த நூல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக ட்ரோன்கள் எங்கெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற தடை உள்ளதோ, எந்த நேரங்களில் எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்று உள்ளதோ அந்த பகுதிகள் நேரங்களைத் தவிர மற்ற இடங்களில் எந்த வித லைசன்ஸ் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த ட்ரோனி ட்ரோன்களை பயன்படுத்தலாம். குஜராத் பல்கலைக்கழகத்தில் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் படிப்பை கொண்டுவந்துள்ளது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் விரைவில் கொண்டு வர முயற்சி எடுக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் போக்குவரத்து, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் ட்ரோன்கள் பயன்பாடு இருக்கும்.

தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ட்ரோன் ஸ்பேஸ் கேட்டுள்ளோம்,20 கிலோ பொருட்களை 40 முதல் 45 நிமிட பயணத்தில் சென்னை முதல் பெங்களூருக்கு கொண்டு செல்ல அனுமதி கேட்டுள்ளோம். மிக வேகமாக வளர்ந்து வருகிறது, அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் வேகமாக வளரும் என்று நம்புகிறோம். மனிதர்கள் ட்ரோன்கள் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு செல்வது குறித்தும் முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.

Tags

Next Story