இனயம் புத்தன்துறையில் மீனவர் தினவிழா - கனிமொழி எம்.பி பங்கேற்பு.

இனயம் புத்தன்துறையில் மீனவர் தினவிழா - கனிமொழி எம்.பி பங்கேற்பு.

உலக மீனவர் நாள் விழா 

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி, குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறையில் மீனவர் தின விழா நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் கூறியதாவது: இங்கு முக்கிய பிரச்சனையாக மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஒரு மாநில அரசால் செய்ய முடியாது. மாநில அரசுக்கு தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே முடியும். ஒன்றிய அரசால் தான் பழங்குடி பட்டியலில் சேர்க்க முடியும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஒரு மாற்றம் வரும். மாற்றம் வந்தால் மீனவர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்தது திமுக ஆட்சி. என பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி , மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மேயர் மகேஷ், எம் எல் எ - க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story