மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் சாலை மறியல் போரட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பகுதியில் இருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள், 4 நாட்டுபடகுகளை இலங்கை கடற்படை பிடித்து சென்றனர். இதைகண்டித்து பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நாளை (ஜூலை 5ம் தேதி) சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது நாட்டுப் படகுகளில் இலங்கை அரசை கண்டித்து கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்களது நாட்டுப் படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்று நாட்டு படகு மீனவர்கள் கூட்டம் பாம்பன் வேளாங்கண்ணி மாதா கோவில் வளாகத்தில் நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் ஏஸ் பி ராயப்பன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நான்கு மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் மற்றும் 100 கற்கும் மேற்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டுள்ளார் இக்கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் பேசப்பட்டதுஇக்கூட்டத்தில் அரசு அதிகாரிகளின் வார்த்தையை ஏற்று தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு நாட்டுப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர்

Tags

Next Story