மீனவர்களுக்கு விருது வழங்க ஆளுநரிடம் கோரிக்கை

வெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

ஒரு நாள் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வந்த தமிழக ஆளுநர் ஆர் .என்.ரவியை அக்னி தீர்த்த கடற்கரை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமையில் ஜனவரி 16ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

மனுவில் குறிப்பிட்டு இருப்பது. வெள்ள மீட்பு பணியின் போது உயிரை பணயம் வைத்து மக்களை மீட்ட மீனவர்களின் தியாகம் மற்றும் உழைப்பை அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். தூத்துக்குடி வெள்ளம் மீட்பு பணியின் போது இறந்த மீனவர் ராபிஸ்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தகுந்த இழப்பீடு அரசு வழங்க வேண்டும். மீட்பு பணியில் முதல் அணியாக நிற்கும் மீனவர் மீட்பு படைக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

மீட்பு பணியில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் மீனவர் மீட்பு படைக்கு பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும். தாமிரபரணி முகத்துவாரத்தில் அமைந்துள்ள முக துவார மண் அடைப்பை உயிரை பணயம் வைத்து நீக்கி பல்லாயிரம் உயிர்களை காத்த 13 மீனவர்களுக்கு அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கியுள்ளனர்.

Tags

Next Story