முடிந்தது தடைக்காலம் - கடலுக்கு செல்ல தயாராகும் படகுகள்
தயார் நிலையில் படகுகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி இன்று இரவு வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தமிழகம் முழுவதும் அமலில் இருந்தது இந்த தடைக்காலம் இன்று இரவு முதல் நிறைவடைகிறது இதை தொடர்ந்து தமிழக முழுவதும் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் தருவைகுளம் வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளன
இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதற்காக விசைப்படகுகளை சுத்தம் செய்து படகுகளில் மீன்பிடி வலைகளை ஏற்றியும் படகுகளுக்கு தேவையான டீசலை நிரப்பியும் வருகின்றனர் மேலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர் இதன் காரணமாக மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படுகிறது கடந்த 60 நாட்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள் நாளை அதிகாலை முதல் கடலுக்குச் செல்வதால் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்ல இருப்பதாகவும் இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் உயரும் என மீனவர்கள் தெரிவித்தனர்