மீன் பிடி தடை காலம் எதிரொலி : மீன்கள் விலை இரு மடங்காக உயர்வு
பைல் படம்
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம் அந்த நிலையில் இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டு உள்ளது இந்த மீன் பிடி தடை எதிரொலியாக மீன்களின் வரத்தை குறைந்துள்ளதால் விலை தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
அந்த நிலையில் சென்னை பட்டினம் பாக்கம் கடற்கரை ஓரம் விற்கப்படும் மீன்களின் விற்பனையானது இரு மடங்காக அதிகரித்துள்ளது . இன்று விடுமுறை நாளை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து பட்டினம்பாக்கம் கடற்கரையில் மீன் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர். ஒவ்வொரு மீன்களின் விலை பட்டியல்,,, இரால் மீன் 600 ரூபாய், வஞ்சிரம் மீன் 1200 ரூபாய், வவ்வால் மீன் 800 ரூபாய், கலியாண் மீன் 600 ரூபாய், கெண்டை மீன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று இரால் மீன் 400 முதல் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று மீனின் வரத்து குறைந்ததன் எதிரொலியாக 600 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது அந்த வகையில் கெண்டை மீன் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்றைய 100 ரூபாய் அதிகரித்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது நேற்று பத்து நண்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று எட்டு நண்டு 200 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
வவ்வால் மீன் 100 ரூபாய் அதிகரித்து 800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது ஐஸ் வஞ்சரம் 100 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய் முதல் 800 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. மீன் கால தடைக்கு பிறகு வஞ்சரம் மீன் 200 ரூபாய் குறைந்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நண்டு, இரால், வஞ்சரம் போன்ற பல்வேறு மீன்களின் விலையும் குறையும் என மீனவர்கள் கூறுகின்றனர் பெரும்பாலும் படகுகள் கடலுக்குச் சென்றால் மீன் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் விலை குறையும் கூறுகின்றனர் மீன்பிடி காலம் என்பதால் தான் மீனின் வரத்தை குறைந்துள்ளதால் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது அதிகரித்துள்ளது...