வெள்ள பாதிப்பு: மத்திய பேரிடர் குழு மீண்டும் ஆய்வு

வெள்ள பாதிப்பு: மத்திய பேரிடர் குழு மீண்டும் ஆய்வு

தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமாரி மாவட்டங்களில் மீண்டும் மத்திய பேரிடர் குழு வெள்ள பாதிப்பு குறித்து வரும் 11 முதல் 14ம் தேதி வரை ஆய்வு செய்கிறது.

தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமாரி மாவட்டங்களில் மீண்டும் மத்திய பேரிடர் குழு வெள்ள பாதிப்பு குறித்து வரும் 11 முதல் 14ம் தேதி வரை ஆய்வு செய்கிறது.
தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் 16 முதல் 18ஆம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ததன் காரணமாக அணைக்கட்டுகள் மற்றும் குளங்கள் நிரம்பியதன் காரணமாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் மற்றும் காக்காற்று வெள்ளம் காரணமாக பொது மக்களின் வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்கள் பெருமளவில் சேதம் அடைந்தது இந்த நிலையில் மத்திய குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 20ம் தேதி மற்றும் 21ஆம் தேதி ஆய்வு செய்தனர் மத்திய பேரிடர் குழுவின் சார்பில் குழு தலைவராக கீர்த்தி பிரதாப் சிங் தலைமையில் 7பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளான தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை ஆய்வு செய்ய உள்ளனர். வரும் 11ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் மத்திய குழுவினர் முதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றன. இது தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.‌

Tags

Next Story