காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றில் குளிக்க தடை!

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றில் குளிக்க தடை!

காவிரி 

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இறங்கி புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையில் புனித நீராடுவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றுக்கு செல்லும் படித்துறைகள், பரிகார மண்டபங்களில் தகரங்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் திதி, தர்ப்பணம், பரிகார பூஜைகள் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. காவிரி ஆற்றில் மின் மோட்டார்களை அமைத்து புனித நீராட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே ஷவர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆடிப் பெருக்கு நாளான ஆக. 3-ஆம் தேதியும், ஆடி அமாவாசை நாளான ஆக. 4-ஆம் தேதியும் காவிரி ஆற்றில் இறங்கி பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஆற்றின் கரையோரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைப்படங்கள் எடுப்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story