மலர் கண்காட்சி 26ம் தேதி வரை நீட்டிப்பு!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி அண்டு தோறும் மே மாதம் நடைபெறும். இந்த ஆண்டு 126-வது மலர் கண்காட்சி கடந்த 10-ம் தேதி துவங்கியது. தமிழக தலைமை செயளாலர் ஷிவ்தாஸ் மீனா கண்காட்சியை திறந்து வைத்தார். 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயிர் செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் டிஸ்னி வேர்ல்டு, கிட்டார், ஆக்டோபஸ், பிரமிடு, நீலகிரி மலை ரயில், முயல், தேன் பூச்சி உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுற்றுலாப் பயணிகளை கவர முதன் முறையாக லேசர் லைட் ஷோ நடத்தப்பட்டது. இந்நிலையில் மலர் கண்காட்சியின் கடைசி நாளான இன்று மாவட்டத்தில் உள்ள பூங்கா ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் நூற்றுக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மலர் கண்காட்சி அன்று நடைபெற்ற போட்டியில் 188 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா பரிசுகளை வழங்கி கௌரவித்தார். நிருபர்களிடம் ஆட்சியர் அருணா, "இன்றுடன் நிறைவு பெற இருந்த மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக," தெரிவித்தார். இந்நிலையில் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 10 நாட்களில் 1 லட்சத்தி 67 ஆயிரத்து 972 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளதாக தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story