தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை உள்ளது. இந்தச் சந்தைக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மல்லிகை, பச்சை துளசி, பிச்சி உள்ளிட்ட அனைத்து மலர்களும் விற்பனைக்கு வருகின்றன. தற்போது கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. ஆனால் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.600-க்கும், அரளி, ரோஸ் ரூ.150-க்கும், கிரேந்தி ரூ.80-க்கும், மஞ்சள் கிரோந்தி ரூ.85-க்கும் விற்கப்பட்டது. மற்ற பூக்களும் விலை உயர்ந்து காணப்படுகிறது. பனிப்பொழிவு நீடிக்கும் பட்சத்தில் பூக்கள் விலை இதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags
Next Story