திருக்கோயில்களில் அன்னதான திட்டம் - குன்றக்குடி அடிகளார் பாராட்டு

திருக்கோயில்களில்  அன்னதான திட்டம் - குன்றக்குடி அடிகளார் பாராட்டு

ஆருத்ரா உலக பன்னிரு திருமுறை மாநாடு 

மயிலம் சிவஞான பால சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் திருக்கைலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம், இந்திரா காந்தி தேசிய கலை மையம், ஸ்ரீமத் சிவ ஞான பாலாய சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கம்பன் கழகம் அறக்கட்டளை இணைந்து நடத்திய தமிழ் உலா 2023 ஆருத்ரா உலக பன்னிரு திருமுறை மாநாடு மயிலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜூகுமார் ராஜேந்திரன், கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஞானஜோதி, இந்திரா, காந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குனர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பால சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற உலக பன்னிரு திருமுறை மாநாட்டு நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தெய்வ சிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் , சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு மயிலம் பொம்மபுர ஆதீனம் சார்பில் இயற்றப்பட்ட இட்டலிங்க யோகா ஆய்வு தொகுதி நூலை வெளியிட்டு மாநாட்டில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி அருள் ஆசி வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பேசுகையில் சாதி, சமய , அடையாளம் தெரியாது. பசித்து வருபவருக்கு உணவு அளிப்பது தான் உண்மையான அன்னதானம். அந்த அன்னதானத்தை இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் சீரும் சிறப்புமாக செய்து கொண்டிருக்கிறார் என பெருமிதத்தோடு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில் சமுதாயத்தில் எல்லாரிடத்திலும் இணைந்து வாழ வேண்டும், சமூக நல்லிணத்தோடு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story