உண்டி கொடுப்போம் திட்டத்தின் பொதுமக்களுக்கு உணவு
பாரதி அறக்கட்டளை சார்பில் உண்டி கொடுப்போம் திட்டத்தின் 500-வது நாளையொட்டி பொதுமக்களுக்கு உணவு
பாரதி அறக்கட்டளை சார்பில் உண்டி கொடுப்போம் திட்டத்தின் 500-வது நாளையொட்டி பொதுமக்களுக்கு உணவு
பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் உண்டி கொடுப்போம் திட்டம் மூலம் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அருகே ஏழை, எளியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. 500-வது நாள் சிறப்பு உண்டி கொடுப்போம் நடைபெற்றது. இதன் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். சரவணமூர்த்தி கோபிநாத், ரோட்டரி செல்வம், பாஸ்கரன், ரோட்டரி ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தொண்டர்சபை அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சிறப்புரை ஆற்றினார். பாரதி அறக்கட்டளை சார்பில் சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காலை உணவு வழங்கினார். பிரபஞ்சம் சேவாஸ்ரம தலைவர் குருஜி ஷிவாத்மா சிறப்பு பிரார்த்தனை செய்து 500 வது நாள் உண்டி கொடுப்போம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 150 பேருக்கு சிறப்பு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் சிவநேசன், சவுந்தர், மணி, பூபதி , பரமேஸ்வரன், பார்வதி, மாது, மாதவன், குழந்தைவேல், மெய்யப்பன், மோகன்,ஆடிட்டர் சரவணன் ஆடிட்டர் செந்தில் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tags
Next Story