வாக்காளர் அடையாள அட்டைக்கு 1950 ஐ தொடர்பு கொள்ளலாம் - சத்ய பிரதா சாகு

வாக்காளர் அடையாள அட்டைக்கு 1950 ஐ தொடர்பு கொள்ளலாம் - சத்ய பிரதா சாகு

 சத்ய பிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், அடையாள அட்டை இல்லாதவர்கள் 1950 யில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜனவரி 22 ஆம் தேதி 6.18 கோடி வாக்களர்கள் இருந்தனர். தற்போது 6.23 கோடி வாக்காளர், 68,144 வாக்குசாவடிகள் உள்ளன, 39 வாக்கு எண்ணிக்கை மையம். 10,90,574 -18 வயது பூர்த்தியான முதல் முறை வாக்கு செலுத்துபவர்கள். 461730 - மாற்றுதிறனாளி வாக்காளர்கள். 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6,13,991 பேர். 7 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்,

அவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் பணியாளர்களுக்கு கொடுக்கும் பயிற்சி முடிக்க அறிவுறித்தி உள்ளோம். 20- காவல் கண்காணிப்பாளர்கள் 59 செலவின கண்காணிப்பாளர்கள், 190 கம்பெனி ராணுவத்தினர் தர இருப்பராக இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. ஏற்கனவே 25 கம்பெனி உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் தமிழகம் வர உள்ளனர், 69.70 கோடி மதிப்பிலான பணம் உட்பட இதர பொருட்கள் நேற்று வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

33.31 கோடி ரூபாய் பணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 6.51 கோடி வருமான வரித்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1950 என்ற எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், 648 - நட்சத்திர பேச்சாளர்களுக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பழைய வாக்காளர் அடையாள அட்டையை இருந்தாலும் அதை வைத்து வாக்கு செலுத்தலாம், 17.53 லட்சம் வாக்களர் அடையாள அட்டைகள் விநியோகப்பட்டுவிட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து , அடையாள அட்டை இல்லாதவர்கள் 1950 யில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

ஏப்ரல் 1 முதல் 13 க்குள் பூத் சிலிப் வழங்கப்படும். 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்கு செலுத்த பார்ம் டி 4,30,734 மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டதில் 77,455 திரும்ப வந்துள்ளது. 45,000 வெப்கேமரா வாக்கு சாவடிகளில் பொறுத்த உள்ளோம். பதற்றமான வாக்கு சாவடிகளில், வாக்கு செலுத்தும் மையங்களுக்குள் அதற்கு வெளியேவும் வெப் கேமரா வைக்க உள்ளோம். நேற்று வரை 781 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வெய்யில் அதிகமாக இருப்பதால் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களுக்கு , சேர் வசதி மற்றும் சாமியானா மையங்களில் போடவும் திட்டமிட்டுள்ளோம். தண்ணீர் வசதி ,மற்றும் ஓ.ஆர்.எஸ் பொடியும் தேவைப்படும் வாக்காளர்களுக்கு வழங்க வாக்கு சாவடிகளில் இருப்பு வைக்கப்படும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு தொடர்பாக ஐ பி சி 294 b பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story