பெண் கட்டாய திருமணம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது !

பெண் கட்டாய திருமணம்: வாலிபர் போக்சோ சட்டத்தில்  கைது !

போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே மைனர் பெண்ணாக இருந்தபோது கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் ஏப்.6- அரியலூர் மாவட்டம் தேவாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி இவர் அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார் புகாரில் நான் மைனர் பெண்ணாக இருந்தபோது சிலால் பகுதியை சேர்ந்த பாலமுருகனுக்கு அவரது உறவினர்கள் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த போது தினமும் மதுபோதையில் வந்து தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் தொல்லை செய்து வந்தார்.மேலும் தான் அணிந்திருந்த நகைகளை தனது அனுமதி இன்றி பறித்துக் கொண்டு என்னை கொடுமைப்படுத்தி தாக்கினர்.

இந்நிலையில் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி பாக்கியலட்சுமியை தாக்கி கொடுமை செய்ததால் காயம் அடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கர்ப்பம் கலைந்து உடல் அளவில் பலவீனமாக இருந்தேன்.

எனவே மைனர் பெண்ணாக இருக்கும்போது என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொடுமைப்படுத்திய பாலமுருகன் அவரது உறவினர்களான அரசு, சந்திரா, சசிகலா, இந்திரா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story