லியோ திரைப்படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வந்த முன்னாள் அமைச்சர்

லியோ திரைப்படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வந்த முன்னாள் அமைச்சர்

முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் 

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தை பார்க்க முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகநாதன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார்.

தூத்துக்குடி மாநகரில் உள்ள பெரிசன், பாலகிருஷ்ணா, உள்ளிட்ட திரை யரங்குகளில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டினர். லியோ படத்திற்கு தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வந்த நிலையில் படத்தை பார்க்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன், பகுதி இளைஞர் பாசறை செயலாளர் நிலா சந்திரன், சந்திரன் தகவல் தொழில்நுட்ப பிரிவு யுவன் பாலா, மைதீன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் வந்தனர். நடிகர் விஜய் நடித்து இன்று காலை 9 மணி முதல் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா திரையரங்கம், பெரிசன் திரையரங்கம், கே எஸ் பி எஸ் திரையரங்கம் ஆகிய மூன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story