வியாபாரிகளை தாக்கிய முன்னாள் காவலர் கைது

X
வியாபாரிகளை தாக்கிய காவலர் கைது
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரி பட்டியைச் சேர்ந்த அஜித், ரவிக்குமார் ஆகியோர் கோழி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் போலீஸ்காரரான அறிவுசெல்வம் (வயது 33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அஜித், ரவிக்குமார் ஆகியோர் தெத்திகிரிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அறிவுச்செல்வம் திடீரென அஜித், ரவிக்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அஜித்தை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. இதில் தலை, முகத்தில் பலத்த காயம் அடைந்த அஜித் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ரவிக்குமார் மேச்சேரி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவுச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
