கோட்டை ஸ்டேஷன் - வேளச்சேரி.. பறக்கும் ரயில் சேவை தொடங்கும்? வெளியான தகவல் !!
ரயில்
ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணிக்க மின்சார ரயில்களை பயணிகளுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. அதிலும் சென்னையில் முக்கியமாக மின்சார ரயில் வழித்தடம் என்றால் அது தாம்பரம் - கடற்கரை வழிதடத்தையே சொல்லலாம்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மூன்று வழிதடங்கள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு வழித்தடங்களில் மின்சார ரயில்களும் ஒரு வழி தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படும். இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை - எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக சென்னை கடற்கரை - எழும்பூர் இடையான 4-வது வழித்தடம் அமைக்கும் பணி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் 4-வது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை கடற்கரை சிந்தாதிரிப்பேட்டைக்கு இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் 7 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரயில் சேவை மீண்டும் துவங்கும் என ரயில்வே கூறியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வேளச்சேரி மட்டும் பறக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.
இதில் 4-வது வழிதட பணிக்காக ரிச்சர் வங்கி இடத்தை கையகப்படுத்துவதில் தெற்கு ரயில்வே சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மார்ச் மாதத்தில் நிறைவு பெற வேண்டிய இந்த திட்டம் இழுத்து கொண்டே போனது இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு பதிலாக கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரிக்ககும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் ; கடற்கரை - எழும்பூர் இடையிலான நான்காவது வழித்தடத்தில் தண்டவாளங்கள் இணைப்பு பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடைமேடைகள் அமைக்கும் பணி நடந்தது. நடை மேம்பாலம் மேற்கூரைகள் அமைத்து உள்ளிட்ட பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருகிறது. தற்போது தண்டவாள இணைப்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் இயக்கம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.