சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கட்டிடங்களுக்கான இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய கட்டிடங்களுக்கான இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா தலைமையில் அடிக்கல் நாட்டு விழா சென்னை பாரிமுனையில் நடைப்பெற்றது. நீதிபதிகளுக்கான 10 பங்களாக்கள், சென்னை பாரிமுனையில் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகளுக்கான அறைகள், ஆவண பாதுகாப்பு அறைகள் என 5 அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ், தமிழ் மொழியில் நீதி இல்லாத நூல்களே கிடையாது. தமிழ் என்றால் நீதி, நீதி என்றால் அது தமிழ் மொழிதான் திருவள்ளுவர் எந்த ஒரு சமயத்தையொ, மதத்தையோ சார்ந்தவர் அல்ல திருவள்ளுவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு சொன்னதும் இல்லை. ஆனால் நீதியை அறத்துடன் செய்ய வேண்டும் என வள்ளுவர் திருக்குறளில் தெரிவிக்கிறார். நீதிமன்றத்தின் பெருமை குறையாமல், அறத்துடன் நீதி பரிபாலனங்கள் செயலாற்ற வேண்டும். நீதிமன்றங்களில் குற்ற வழக்குகள் குறைக்கப்பட வேண்டும். உரிமையியல் வழக்குகளுக்கு அதிகப்படுத்த வேண்டும்.