பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் என்ற பெயரில் மோசடி!

பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் என்ற பெயரில் மோசடி!

காவல்துறை 


வேலூர் மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் என்ற பெயரில் மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். நாகரீக வளர்ச்சியில் இணைய குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுப்புது வடிவங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மர்மநபர்கள் அபகரித்து வருகின்றனர். இதை தடுக்க சைபர் கிரைம் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மர்மநபர்கள் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் நடக்கிறது. இந்தநிலையில் சமீப காலமாக பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் குறுந்தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது மர்மநபர்களின் புதுவிதமான ஏமாற்றும் யுக்தி என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா கூறியதாவது: மர்மநபர்கள் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பிரதம மந்திரியின் லேப்டாப் திட்டம் 2024 என்ற பெயரில் தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர். அதில் விண்ணப்பிப்பவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்றும், குறைவான லேப்டாப்களே உள்ளது உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது உண்மை அல்ல. மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தை அறிவிக்கவில்லை. அதை நம்பி மர்மநபர்களை தொடர்பு கொண்டால் உங்களிடம் இருந்து பணம் பெற்று ஏமாற்றிவிடுவார்கள், என அவர் கூறினார்.

Tags

Next Story