தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இலவச காது வால் நரம்பு அறுவைச் சிகிச்சை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறவிக் குறைபாடு காரணமாக காது கேளாத குழந்தைகளுக்கும், வயோதிகத்தால் செவித்திறன் இழந்த முதியோருக்கும் காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர்களுக்குகாது கேட்புக் கருவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கிய கல்லூரி முதல்வர் பின்னர் தெரிவித்தது:
பிறவியிலேயே சிலருக்கு காது கேட்காது. வயோதிகத்தால் செவித் திறன் இழக்கும் முதியவர்களும் உள்ளனர். இவர்கள் சரியான நேரத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகினால் ஆரம்ப இடையீட்டு மையம் மூலம் பரிசோதனை செய்யப்படும். இதைத் தொடர்ந்து காது வால் நரம்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, காது கேட்புக் கருவி பொருத்தப்படும். மேலும், பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு இச்சிகிச்சைக்கு பிறகு 2 மாதங்களுக்கு பேச் சுப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம், காது கேளாத குழந் தைகள் பேச்சுத் திறனையும் பெறுகின்றனர். இந்தச் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 10 லட்சம் செலவாகும். ஆனால், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இச்சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. இதுவரை 61 பேருக்கு இத்தகைய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் பாலாஜிநாதன். அப்போது மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், உதவிப் பேராசிரியர் கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.